Tuesday, March 22, 2011

பூதங்களே பூவாகவே இருங்கள்!!!

வானமே நீ கண் திற
விவசாயம் செழித்திட

பூமியே நீ பொறுமை காத்திடு
மக்கள் நலம் வாழா

நீரே நீ நிலைத்திடு
உயிரினங்கள் தழைத்திட

காற்றே நீ தவழ்ந்திரு
எங்கும் வசந்தம் வீசிட

நெருப்பே நீ ஜுவாலையாய் இரு
உலகத்தின் உழைப்புக்கு உதவிட

ஐம்பூதங்கள் சேர்வதே உலகம்
அவை புன்னகையுடன் இயங்குவதும்
பூதங்களாக சிரிப்பதும் மனித பூதங்களின் கையில்!!!
பூதங்களே பூவாகவே இருங்கள்!!!