பாட்டி சொல்கையில் வியந்தேன்
தாத்தா சொல்கையில் மகிழ்ந்தேன்
அம்மா சொல்கையில் பயந்தேன்
அப்பா சொல்கையில் வளர்ந்தேன்
அண்ணன் சொல்கையில் வீரமுற்றேன்
தங்கை சொல்கையில் பாசமுற்றேன்
நண்பன் சொல்கையில் நட்புற்றேன்
காதலி சொல்கையில் மயக்கமுற்றேன்
மனைவி சொல்கையில் பக்குவமுற்றேன்
நான் முழு மனிதனாக
நீ எத்தனை பரிமானமுற்றாய்
என் வாழ்கை பயணத்தில், கதையே.....
கதைகள் நிறைந்த வாழ்வில்
வாழ்க்கை கதையில் எனக்கும்
ஒரு வாழும் பாத்திரம் தந்த கதையே, நீயும் என் உறவே.....
Saturday, December 18, 2010
Saturday, December 11, 2010
உன்னிடம் இருப்பதாலா!!
இமை மூடியும் ஏன்
இந்த ஈரம் கண்களில்
மலர்கள் வாடிவிடுமாம்
ஈரம் இல்லை என்றால்!
பதித்திருந்தேன் என் கண்களில் உன் உருவம்!!
பகை வஞ்சம் சோகம்
மறந்தது என் நினைவு
மகிழ்ச்சி மற்றும் நிறைந்தது
வருடியது என் மனம்!
வைத்திருந்தேன் என் நினைவில் உன் நினைவை!!
பறக்கிறேன் வானில்
மிதக்கிறேன் தீயில்
எப்படி சாத்தியம்
இவை எல்லாம்!
உன் மின்னல் பார்வை என்னை தீண்டியதால்!!
துடிக்க தவறுகிறது
என் துடிப்பு
சுவாசிக்க மறக்கிறது
என் சுவாசம்!
ஒ என் இதயம் உன்னிடம் இருப்பதாலா!!
Monday, December 6, 2010
கவிங்கனாய் இருந்து போ !!
காதலனாய் காத்திருந்தேன் உனக்காக அன்று
இன்னும் பாது காத்து இருக்கிறேன் உன் நினைவாய் இன்று
பேசிக்கொண்டே தொலைத்தேன் உறக்கத்தை அன்று
பேசிய வார்த்தைகள் மட்டும் என்னுள் உறக்கத்தில் இன்று
வானும் மண்ணும் போல நீயும் நானும் என நினைத்தேன் அன்று
வானும் மண்ணும் சேராத துருவம் என உணர்ந்தேன் இன்று
உயிர் உள்ள செதுக்கிய சிற்பம் அழகு என்றிருந்தேன் அன்று
அழகிய சிற்ப்பங்களுக்கு உயிர் இருப்பது அவஸ்தை என்கிறேன் இன்று
இறகுகள் விரித்து பறந்தேன் கூட்டை மறந்த பறவையாக அன்று
இறகுகள் இருந்தும் பறப்பதை மறந்த பறவையாக கூண்டுக்குள் இன்று
காலங்கள் கடந்து சென்றன கவிதையாய் என் அனுமதியின்றி அன்று
அனுமதித்தது காலம் கவிங்கனாய் இருந்து போ சில காலம் நீயும் என்று

Sunday, December 5, 2010
ஒரு தலை காதல்
வேரின் பலம் புயல் வரும் வரை மரம் அதை அறிவதற்கு இல்லை
வயல்களின் செழுமை நீர் இல்லாமல் செழிப்பதற்கு இல்லை
கனியின் சுவை பூவுக்குள் இருக்கும் வரை சுவைப்பதற்கு இல்லை
அகத்தின் அழகு வார்த்தைகள் இல்லாமல் தெரிவதற்கு இல்லை
நிலவின் முகம் சூரியனின் பின்னால் இருக்கும் வரை புலப்படுவதற்க்கு இல்லை
கனவின் சுகம் உறக்கம் இல்லாமல் யாரும் அனுபவிப்பதற்கு இல்லை
காதலின் வலி தோல்வி இல்லாமல் யாரும் உணர்வதற்கு இல்லை
என் மனதின் காதல் நான் சொல்லாமல் உனக்கு வெளிபடுவதற்க்கு இல்லை
உன்னை நேசிக்க மட்டுமே நான் என்று ஒரு ஒரு தலை காதல்

Saturday, December 4, 2010
காதலில் விழித்தேன்
நீ இருப்பது நிஜம் என்று நினைத்தேன் என் கனவில்
நீ என்னை காண காத்திருந்தேன் இருளில்
உன் நேசம் எனக்கென மிதந்தேன் காற்றில்
உன் வசம் நான் என்றிருந்தேன் இந்த பயணத்தில்
ஆனால்........
நான் இருப்பது கனவில் என்றறிந்தேன் உன் நிஜத்தில்
நான் காத்திருப்பது இருளில் என உணர்ந்தேன் உன்னை காணுகையில்
என் நேசம் தொலைத்தேன் இந்த காற்றில்
என் வசம் நீ இல்லை இந்த பயணத்தில்
விழித்தேன் விழித்தேன் காதலில் விழித்தேன்
காதல் மட்டுமே என்னுடன் அவள் இல்லை என்னிடம் என்று.......

Subscribe to:
Posts (Atom)