Saturday, December 18, 2010

நீயும் என் உறவே.....

பாட்டி சொல்கையில் வியந்தேன்
தாத்தா சொல்கையில் மகிழ்ந்தேன்

அம்மா சொல்கையில் பயந்தேன்
அப்பா சொல்கையில் வளர்ந்தேன்

அண்ணன் சொல்கையில் வீரமுற்றேன்
தங்கை சொல்கையில் பாசமுற்றேன்

நண்பன் சொல்கையில் நட்புற்றேன்
காதலி சொல்கையில் மயக்கமுற்றேன்
மனைவி சொல்கையில் பக்குவமுற்றேன்

நான் முழு மனிதனாக
நீ எத்தனை பரிமானமுற்றாய்
என் வாழ்கை பயணத்தில், கதையே.....

கதைகள் நிறைந்த வாழ்வில்
வாழ்க்கை கதையில் எனக்கும்
ஒரு வாழும் பாத்திரம் தந்த கதையே, நீயும் என் உறவே.....

No comments:

Post a Comment