தலைவனின் தலைவலி !!
தந்தையின் தலைவலி !!
இரண்டிற்கும் வேறுபாடு
இருக்கும் என்று
இருக்கையில் இளைப்பாரும்
நான்....
தலைவனா ? தந்தையா ?
தலைவலியா ?
தலைவனாக இருக்க
நான் தந்தையாக
வேண்டிய கட்டாயம்
உணர்ந்தேன் !!
தந்தையாக வழி நடத்த
தலைவனின் திறன்
அறிய முற்ப்பட்டேன்.....
தந்தைக்குள் ஒரு
தலைவனும்...
தலைவனுக்க்குள் ஒரு
தந்தையும்...
ஒன்றிணைந்து
இருக்கும் வரை
நான் இளைப்பார
எனக்கு இருக்கை உண்டு !!!
அவை வேறுபட்டிருக்கும்
பட்சத்தில் தலைவலி
என்னுள் இளைப்பார
என் இருக்கையை
நான் இழக்க
நேரிடும்.........
ஒரு தந்தையாக
ஒரு தலைவனாக
தினமும் தலைவலியுடன்
வாழ்க்கை படகில்
வாழ்வையும் உலகையும்
ரசிக்கும் நான்.......