என் உள்ளத்தில் உள்ள உன் நினைவுகளின் துடிப்பை
என் உதடுகளின் அசைவுகளால்
உன் செவி வழியே உன் மனதிற்க்கு உரைக்கும்
ஓர் நெருங்கிய உரையாடல்
நம் கைபேசி உரையாடல்........
நம் முகங்கள் தொலைவினில் இருந்தாலும்
நம் மூச்சு சத்தங்கள் மட்டுமே உரசிக்கொள்ளும்
ஓர் இன்னிசை உரையாடல்
நம் கைபேசி உரையாடல்....
கண்கள் தேடும், செவிகள் காத்திருக்கும்
கைகள் ஆர்பரிக்கும், தூக்கம் குறையும்
வார்த்தை பரிமாற்றங்களால் எண்ணங்களை
பகிர்ந்துகொள்ளும் இர்மனம், ஒர்மனமாய் இணையும்
எண்ணற்ற மாற்றங்கள் கொண்ட உரையாடல்
நம் கைபேசி உரையாடல்....
No comments:
Post a Comment