Monday, December 6, 2010

கவிங்கனாய் இருந்து போ !!

காதலனாய் காத்திருந்தேன் உனக்காக அன்று
இன்னும் பாது காத்து இருக்கிறேன் உன் நினைவாய்  இன்று
பேசிக்கொண்டே தொலைத்தேன் உறக்கத்தை அன்று
பேசிய வார்த்தைகள் மட்டும் என்னுள் உறக்கத்தில் இன்று
வானும் மண்ணும் போல நீயும் நானும் என நினைத்தேன்  அன்று
வானும் மண்ணும் சேராத துருவம் என உணர்ந்தேன் இன்று
உயிர் உள்ள செதுக்கிய சிற்பம் அழகு என்றிருந்தேன் அன்று
அழகிய சிற்ப்பங்களுக்கு உயிர் இருப்பது அவஸ்தை என்கிறேன் இன்று
இறகுகள் விரித்து பறந்தேன் கூட்டை மறந்த பறவையாக அன்று
இறகுகள் இருந்தும் பறப்பதை மறந்த பறவையாக  கூண்டுக்குள் இன்று
காலங்கள் கடந்து சென்றன கவிதையாய்  என் அனுமதியின்றி அன்று
அனுமதித்தது காலம் கவிங்கனாய் இருந்து போ சில காலம் நீயும் என்று

No comments:

Post a Comment