வேரின் பலம் புயல் வரும் வரை மரம் அதை அறிவதற்கு இல்லை
வயல்களின் செழுமை நீர் இல்லாமல் செழிப்பதற்கு இல்லை
கனியின் சுவை பூவுக்குள் இருக்கும் வரை சுவைப்பதற்கு இல்லை
அகத்தின் அழகு வார்த்தைகள் இல்லாமல் தெரிவதற்கு இல்லை
நிலவின் முகம் சூரியனின் பின்னால் இருக்கும் வரை புலப்படுவதற்க்கு இல்லை
கனவின் சுகம் உறக்கம் இல்லாமல் யாரும் அனுபவிப்பதற்கு இல்லை
காதலின் வலி தோல்வி இல்லாமல் யாரும் உணர்வதற்கு இல்லை
என் மனதின் காதல் நான் சொல்லாமல் உனக்கு வெளிபடுவதற்க்கு இல்லை
உன்னை நேசிக்க மட்டுமே நான் என்று ஒரு ஒரு தலை காதல்
பெருமையாக தான் உள்ளது என் நண்பனும் ஒரு கவி என என்னும் போது!!!அது என்ன ("கனியின் சுவை பூவுக்குள் இருக்கும் வரை சுவைப்பதற்கு இல்லை ")பூவிலிருந்து காய் ,காயிலிருந்து கனி,ஆனால் காய் என்ற உலகத்தையே மறைத்து விட்டு(உன் காதலைப் போல) நேராக கனிக்கு தாவி விட்டாய் .
ReplyDelete