Saturday, December 11, 2010

உன்னிடம் இருப்பதாலா!!


இமை மூடியும் ஏன்
இந்த ஈரம் கண்களில்
மலர்கள் வாடிவிடுமாம்
ஈரம் இல்லை என்றால்!
பதித்திருந்தேன் என் கண்களில் உன் உருவம்!!
 
பகை வஞ்சம் சோகம்
மறந்தது என் நினைவு
மகிழ்ச்சி மற்றும் நிறைந்தது
வருடியது என் மனம்!
வைத்திருந்தேன் என் நினைவில் உன் நினைவை!!
 
பறக்கிறேன் வானில்
மிதக்கிறேன் தீயில்
எப்படி சாத்தியம்
இவை எல்லாம்!
உன் மின்னல் பார்வை என்னை தீண்டியதால்!!
 
துடிக்க தவறுகிறது
என் துடிப்பு
சுவாசிக்க மறக்கிறது
என் சுவாசம்!
ஒ என் இதயம் உன்னிடம் இருப்பதாலா!!

1 comment: